செவ்வாய், 15 டிசம்பர், 2009

பதிவுலகம் எங்கே போய் கொண்டிருக்கிறது

என்னமோ ஒரு மாதமாக நான் பதிவை வாசிப்பதுடன் நிறுத்திவிடுகிறேன்.பின்னூட்டப்பெட்டியை திறக்கிறேன் ஆனாலும் பின்னூட்டமிட என் மனது சற்று யோசிக்கிறது.

சில பதிவர்கள் நல்ல தகவல் தொடர்புடைய பதிவுகளையே பதிவுலகத்துக்கு கொடுத்து கொண்டிருக்கிறார்கள். இளைய சமுதாயத்தை எவரெஸ்ட் சிகரம் ஏற வழிகாட்டுகிறார்கள்.

சில பதிவர்கள்  சிரிக்கவும்,சிந்திக்கவும் வைக்கிறார்கள்.

சில பதிவர்கள் அனுபவங்களை  நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்கள்.

சில பதிவர்கள் இளைய சமுதாயத்தை தற்கொலை பாறைக்கு அழைத்து செல்கிறார்கள்.அய்யா வாங்க,அம்மா வாங்க,  பின்னூட்டமிடுங்க என பதிவுலக பிச்சையெடுக்கிறார்கள்.
சரி போனா போகுது என மனசுக்கு தோணினதை பின்னூட்டமாக்கினால். மறுநாள் sidebar-ல் விமர்ச்சன பின்னூட்டம்.
இப்படிப்பட்ட கூவம் ஆற்று கூத்தாடிகளை எப்படி களை எடுப்பது?

அப்படிபட்ட குப்பை பதிவுகளுக்கு கூட எப்படித்தான் பிரபல இடுக்கையில் இடம் கிடைக்கிறது?
இவர்தான் பல Usernames -ல் ஓட்டளிகிறாரோ!






செவ்வாய், 24 நவம்பர், 2009

சில நேரங்களில் சில நிகழ்வுகள்

சில நேரங்களில்  சில நிகழ்வுகள் நமக்கு தெரியாமலேயே நடக்கின்றன.இன்று காலையில் கடைக்கு செல்லும் போது ஒரு பலூன்காரர் ரோட்டோரத்தில் பலூன் விற்றுக்கொண்டிருந்தார். என்னோட பசங்களுக்கு பலூன்னா ரொம்ப பிடிக்கும் அதுவும் ஆப்பிள்,இதய வடிவ பலூனென்றால் ரொம்ப ரொம்ப பிடிக்கும்.சரி பலூன் வாங்க்கலாம் வாங்கலாம் என்று விலை கேட்டேன்.ஒரு பலூன் பத்து ரூபாய் என கன்னடத்தில் சொன்னார் பலூன்காரர். பலூன் பொட்டுமா என நான் கேட்க,அவரோ பொட்டாது என்றார்.சரி அப்ப இரண்டு ஆப்பிள் பலூன் நல்லதாப் பாத்துக் கொடுங்க என்றேன்.  அவர் பலூனை தொட்டதும் டமார் என்ற சத்தத்துடன் பலூன் வெடித்தது.அடுத்த நொடியிலேயே நான் எஸ்கேப்.எனக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை.உடனேயே போன் போட்டு என் கணவரிடம் சொன்னேன்.அவர் சிரித்துகொண்டே,உனக்கு கொழுப்பு தான்; பாவம் அவனுக்கு 10 ரூபாய் வேஸ்ட் என்று சொல்லிவிட்டு அப்புறம் பேசுகிறேன் என போனை வைத்து விட்டார்.
பலூன்காரர் என்னை எப்படியெல்லாம் திட்டியிருப்பாரோ?

புதன், 11 நவம்பர், 2009

கெஞ்சல்கள்

என் முந்தைய பதிவை வாசித்த,ஓட்டளித்த,பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.

ஆப்பிள் கன்னமுடையவளே
என் அழகு தேவதையே
நீ சிரிக்கும்போது விழும்
கன்னக் குழிகளை
பார்வையால் முத்தமிடு என
என் கண்கள் கெஞ்சுகிறது!

உன் கயல்விழி கழுகுப்பார்வை
என்னை சற்று மிரட்டினாலும்
அவள் கருவிழி
 பிம்பத்துக்காய் காத்திரு என
என் உள்ளம் கெஞ்சுகிறது!

நீ சுமந்து வரும்
மல்லிகை பூ வாசம்
மாசில்லாத ஆக்ஸிஜனாம்
இன்னும் சுவாசித்துவிடு என
என் நுரையீரல் கெஞ்சுகிறது!

எனக்கென்னமோ சந்தேகமாயிருக்கிறது
அவளென்ன மெழுகுச் சிலையோ
அருகில் போய்
 தொட்டுப் பார் என
என் கைகள் கெஞ்சுகிறது!

இப்படி எத்தனை நாள் தான்
கவிதை வடிப்பாய்
உன் இதயக்கோவிலுக்குள்
அவளுக்கு விளக்கேற்று என
 என் இதயம் கெஞ்சுகிறது!

செவ்வாய், 10 நவம்பர், 2009

ஸாரி(Sorry) கேட்ட நெட்வொர்க்கிங் Mam!

    என்   முந்தைய பதிவை வாசித்த,வாக்களித்த,கருத்துரையிட்ட அனைவருக்கும் நன்றி!       
      நான் MSc. படித்துகொண்டிருக்கும் போது, எங்கள் networking paper எடுத்த பேராசிரியை ரொம்பவே Strict.அவர் வகுப்பு என்றாலே எங்களுக்கு தூக்கம் வரும்.தினமும் ஒரு மாணவனையாவது வகுப்பிலிருந்து வெளியேற்றாமல் வகுப்பு நடத்தியதில்லை.
அவர் வகுப்பு நடத்தும் போது எல்லோரும் அவர் முகத்தையே பார்த்துக்கொண்டிருக்கவேண்டும்,லேசாகத் திரும்பினாலும் ,உடனே வெளியே அனுப்பி விடுவார்.வெளியே அனுப்புவது மட்டும் என்றால் வகுப்பே வெளியே போக ரெடியாயிருந்திருக்கும்.ஆனால் வெளியே அனுப்பும் student க்கு அட்டென்டன்ஸ்-ம் கிடையாது.
அட்டென்டன்ஸ்க்கு பயந்து எப்படியாவது அவங்க முகத்தை பார்த்துக்கொண்டே இருப்போம்.
      ஒரு நாள் அவங்க பாடம் நடத்திகொண்டிருந்த வேளையில் ஒரு தடவை திரும்பி ஜன்னலைப் பார்த்தேன்.அவ்வளவு தான் என்னிடம் ஒரு கேள்வி கேட்டாங்க,எனக்கு விடை தெரியவில்லை.நான் பேசாமல் நின்றேன். வெளியே போ என்றாங்க. நானும் மறுபேச்சு பேசாமல் வெளியே போனேன்.வகுப்பே அமைதியானது;ஏனென்றால் என்னுடைய முகவரி வகுப்பில் உள்ள் ஒருவருக்கு கூடத் தெரியாது.அப்படி பட்ட சுபாவம் உள்ளவள் நான்,வகுப்பில் பக்கத்தில் இருக்கும் மாணவியுடன் கூட பேசியதில்லை.எனக்கும் மனதுக்குள் ரொம்பவே கவலையாக இருந்தது.
         மறுநாள் காலையில் கம்ப்யூட்டர் லேப் இருந்தது.இதே மேம் தான் எனக்கு Lab Incharge.நான் Practical செய்து கொண்டிருக்கும் போது என்னருகில் வந்து ப்ரொக்ராம்ஸ் போட்டாச்சா என கேட்டாங்க.ஆம் என என் Practical Note ஐ காட்டினேன்.சரி சரி அப்புறம் பார்க்கிறேன்.நீ கிறிஸ்டியனா? என்று கேட்டானங்க.ஆமா என்றேன்.
"நேற்றைக்கு உன்ன வகுப்பிலிருந்து வெளியே அனுப்பினதுக்கு சாரிம்மா"என்றாங்க.எனக்கு ஒரே ஆச்சரியம்.நோ ப்ராப்ளம் மாம் என்றேன் சிரித்துக்கொண்டே!.
மேம் சாரி கேட்ட விஷயம் Computer Depaartment ஐ ஆச்சரியப்பட வைத்தது.

ஞாயிறு, 8 நவம்பர், 2009

அதிர்ச்சிக்குள்ளாக்கிய என் கணவரின் பிறந்த நாள்!

நவம்பர் 9, என் கணவரின் பிறந்த நாள்,எல்லா பிறந்த நாளையும் அவருக்கு ஞாபகப்படுத்துவது நான் தான்!.நவம்பர் ஒன்றாம் தியதியே ஆயத்தங்கள் செய்ய தொடங்கி விடுவேன். எல்லா பிறந்த நாளுக்கும் ஏதாவது இன்ப அதிர்ச்சி கொடுப்பது வழக்கம்.
சரி இந்த தடவை எப்படி கொண்டாடலாம் என யொசித்துக்கிண்டிருந்தேன், அப்பொது இந்த தடவை அவருடைய பிறந்த நாளை முன் கூட்டியே ஞாபகபடுத்தாமல் மாலையில் திடீர் இன்ப அதிர்ச்சி கொடுக்கலாம் என தீர்மானித்தேன்.

இன்று காலையில் எழும்பி ஒரு வாழ்த்து கூடச் சொல்லவில்லை என் குழந்தைங்க Happy Birthday என் சொல்லிக்கொண்டே நடந்தனர்(நிஜமாகவே அப்பாவுக்கு பிறந்த நாள் என் தெரிய வாய்ப்பில்லை,அவங்களுக்கு இப்ப தான் மூன்றே கால் வயதாகிறது).
என் மனசுக்குள்ள என்ன கலர் T-Shirt எடுக்கலாம்.XL size எடுக்கலாம் XXL ரொம்பவே பெரிசா இருக்கும். கேக் எந்த கடையில வாங்கலாம்? ப்ளாக் பாரஸ்ட் தான் அவருக்கு பிடிக்கும் ஆனா குட்டீஸ் தொட்டு கூட பாக்க மாட்டாங்க, சரி அத கடையில போய் decide பண்ணிக்கலாம்.
சரி சாப்பாடு மட்டன் பிரியாணியா இல்ல சிக்கன் பிரியாணியா?  சிக்கன்னா ஃப்ரெஷ் சிக்கன் வாங்கலாம், மட்டன்னா ஃப்ரெஷ்ஷா இருக்குமா எனத் தெரியவில்லை.கடைசியா சிக்கன் வாங்கலாம் என்றே முடிவு செய்தேன்.கொஞ்சம் decorative things வாங்கணும்.ப்ரியாணி ரைஸ் இல்ல அது வாங்கணும், என என் மனதில் பல  எண்ண அலைகள் ஓடிக்கொண்டே இருந்தன.அவர் ஆபீஸ் போவது வரைக்கும் எதுவும் சொல்லவில்லை.
பசங்கள் ஸ்கூலுக்கு அனுப்பி வைத்துவிட்டு நான் ட்ரெஸ் பண்ணி கடைக்கு கிளம்புவதற்க்கு ரெடியானேன். கதவை பூட்டுவதற்கு கீயைத் தேடினேன்,கீயை காணோம்.உடனே என் கணவருக்கு போன் பண்ணினேன்.அவர் போன் எடுக்கவில்லை.திரும்பவும் வந்து கீயைத் தேடினேன்.கீயைக் காணோம்.திரும்பவும் போன் போட்டேன்.போன் எடுக்கவில்லை. உடனே "Where is the Key" ena SMS அனுப்பினேன்.உடனே போன் பண்ணி,கீ என் கைல இருக்கு,அவன் (என் தம்பி) கீ? எனறார். அது அவன் கைல இருக்கு என்றேன். நீ என்ன வெளியே போறியா? என்றார். ம் vegitables வாங்க போகணும்  என்றேன். சரி நான் Evening வாங்கி தறேன் என்றார்.இருவரும் வீட்டு கீயை எடுத்திட்டு ஆபீஸ் போங்க என சொல்லிவிட்டு  போனை வைத்தேன்.
இனியென்ன கொண்டாட்டம்? எல்லாமே எனக்கு பேரதிர்ச்சி ஆகிவிட்டது;
சரி இனி ப்ளாக் பார்ப்போம் என Computer-ஐ ஆன் பண்ணினேன்.




என் இனிய

 காதல் தெய்வத்துக்கு

பிறந்தநாள் நல்வாழ்த்துகள்

புதன், 4 நவம்பர், 2009

புது மொபைல் வாங்கிட்டேன்

               கடந்த சனிக்கிழமை என் கணவரின் நண்பன் (நண்பன் என்று சொல்தை விட உடன் பிறவா தம்பி என்று சொல்வது தான் சரி.)  வீட்டிற்கு வந்திருந்தார்.எப்போது அவன் வீட்டிற்கு வந்தாலும் என்னப்பா மொபைல் மாத்திட்டியா? என் கேட்டு கிண்டலடிப்பது வழக்கம். இந்த தடவையும் என்னப்பா மொபைல் மாத்திட்டியா எனச் சிரித்துக்கொண்டே கேட்டேன்.

             என்ன அண்ணி "அந்த கொடுமையை எப்படி சொல்ல",என்று சலித்துகொண்டே புது மொபைலை காட்டினான்.அபபாடா இப்பவாவது புது மொபைல் வாங்கினியே;என்றேன் சிரித்துக்கொண்டே.பழைய மொபைல தீபாவளிக்கு ஊருக்கு போகும்போது பஸ்ல எவனோ திருடிட்டான்.மொபைல் இல்லாம ஆபீஸ்ல எதுவும் வேலை செய்ய முடியாது அதனால புதுசா  ஒரு மொபைல் வாங்கியிருக்கேன் என்றான்.

 பஸ்லயா,எப்படியப்பா திருட்டு போச்சு என்றேன்.

       நைட் 12 மணிக்கு ஒரு SMS வந்தது:அதை படிச்சிட்டு,மொபைல கையில வச்சிகிட்டே தூங்கிட்டேன். முழிச்சு பாத்தா மொபைல காணோம்.பஸ்ல கண்டக்டர்ட சொன்னேன்.பக்கத்துல இருந்தவன செக் பண்ணி பார்த்தார்,அவன் எடுக்கவில்லை என்றான்.எனக்கு அவன் தான் எடுத்திருப்பான் என தோன்றுகிறது என சொல்லி சங்கடப்பட்டான்.

வாங்கி எவ்வளவு நாளாச்சு என்றேன்.

          அது வாங்கி இரண்டரை வருஷமாச்சு அண்ணி,முரளியிடமிருந்து செகண்ட் ஹேண்டா, 2200 ரூவாக்கு வாங்குனது.நல்ல மொபைல் தொலஞ்சு போச்சு என்றான் (மொபைல் லட்சணம் எனக்கு தான் தெரியும்  Number Display ஆகாது, Key Pad ஐ பூதக்கண்ணாடி வைத்து தான் பார்க்கணும்)

எனக்கு இதை கேட்டதும் சிரிப்பு தான் வந்தது. எப்படியோ புது மொபைல் வாங்கிட்ட என்றேன் சிரித்துகொண்டே.

வெள்ளி, 16 அக்டோபர், 2009

முதல் ரேங்க் உங்கள் குழந்தை எடுக்கவில்லை என கவலைப்படுகிறீர்களா?

என்னோட தங்கை ஒரு நாள் திடீரென ஃபோன் பண்ணினா.எனக்கு ஒரே ஆச்சரியம்,ஏன்னா அவ ஒரு நாள் கூட ஃபோன் பண்ணியதே இல்ல,எப்போதும் நான் தான் பண்ணுவேன். என்ன ஃபோன் பண்ணியிருக்க என்ன பிரச்சினை என பதற்றத்துடன் கேட்டேன்.
எம் பொண்ணு இந்த முறை 15 ஆவது ரேங்க் எடுத்திருக்கா, எனக்கு ஒரே பதற்றமா இருக்கு என்றாள்.இது தானா விசயம்,என சற்று நிம்மதியடைந்தேன்.
அவ பொண்ணு என்ன படிக்கிறாண்ணு தெரிங்ஞ்சுகிட்டா நீங்களே வருத்தப்படுவீங்க வெறும் LKG தான்!.எவ்வளவு சதவீதம் மதிப்பெண் எனக் கேட்டேன், வெறும் 83 சதவீதம் தான், என்ன பண்ண என ஒரே கவலையுடன் சொன்னாள்.
போன தடவ 7-வது ரேங்க்.இப்ப 15 என ஒரே குமுறல் தான் அவள்.எனக்கு வந்த கோபத்துக்கு அளவே இல்ல.
சரி நீ ஒண்ணும் கவலப் படாத,அவ நல்ல சதவீதம் மார்க் எடுத்திருக்கா,அவ முதல் ரேங்க் எடுக்கணும்னு நீ ஆசப்படுறது தப்பு.நீ அவளை அடிக்கவோ, திட்டவோ செய்யாத, நீ எப்பவுமே அவளிடம் முதல் ரேங்க் எடுக்கணும்னு சொல்வத விட,மக்கள் இப்ப இவ்வளவு சதவீதம் மதிப்பேண் எடுத்திருக்க,மக்கள் நல்லா படிக்கிற என அவளை பராட்டு. அடுத்த தடவை இதை விட கொஞ்சம் அதிகம் மதிபபெண் எடுக்கணும் என புரியும் படியாகச் சொல்லு என அறிவுரை சொன்னேன்.
மேலும் எப்பவுமே குழந்தைய அடுத்த குழந்தையுடன் போட்டி போட வைக்காதே;அதனால குழந்தைக்கு அடுத்த குழந்தை மீது வெறுப்பு தான் வரும்,மேலும் போறாமை,போட்டி மனப்பான்மை,கோபம் என பல கெட்ட குணங்கள் வரும்.அது தவிர  ,தாழ்வுமனப்பான்மை,மன அழுத்தம் என  மனவியல் ரீதியாகவும் குழந்தை பதிக்கப்பட வாய்ப்பிருக்கு.எனவே அவளுக்கு போட்டி மனப்பான்மையை ஊட்டாதே. அவளுக்குள்ளேயே ஒரு போட்டி மனப்பான்மையை உருவாக்கு என அட்வைஸ் பண்ணினேன். உம் என சொல்லிவிட்டு ஃபோனை கட் பண்ணினாள்.
ஓடித்திரிய வேண்டிய வயதில ரேங்க் எடு எடுன்னா எப்படிங்க முடியும்?
இது போல நிறைய தாய்மார்கள் இன்று தேவை இல்லாமல் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்கள், இந்த பதிவு அவர்களுக்கு பயனளிக்கும் என நினைக்கிறேன்.

வெள்ளி, 9 அக்டோபர், 2009

என் முதல் திருட்டு

எனக்கு ஒன்பது வயதிருக்கும்,சரியாக ஞாபகம் இல்லை.ஒரு நாள் தேங்காய் எண்ணெய் வாங்கி வர கடைக்கு அனுப்பினாங்க.நானும் போய் எண்ணெய் வாங்கி வந்தேன்.கடைக்காரர் 2 ரூபாய் நோட்டு மீதம் கொடுத்தார்.அந்த 2 ரூபாய் நோட்டு ஒரு மடிப்பு கூட இல்லாமல் அப்ப அச்சடித்து எடுத்தது மாதிரி புதுசாக இருந்தது.
எனக்கு அந்த ரூபாய் நோட்டு ரொம்பவே பிடித்து போயிற்று.அம்மாவிடம் கொடுக்ககூடாது என முடிவெடுத்தேன்; கேட்டால் கடைக்காரர் தரவில்லை என பொய் சொல்லாம் என்ற முடிவுடன் வீட்டிற்கு வந்தேன்.அம்மாவும் கேட்கவில்லை. சரி இனி பிரச்சினை இல்லை,எங்காவது ஒளித்து வைப்போம் என்ற முடிவுடன் ஒளித்து வைக்க இடம் தேடினேன்.சரி ஒரு வழியாக இடத்தையும் கண்டுபிடித்தேன். வீட்டிற்கு முன்னால் மணல் நிறைய கொட்டி வைத்திருந்தார்கள். அங்கு பெரியவர்கள் யாரும் வரமாட்டார்கள்.நானும் என் தங்கைகளும் தான் விளையாடுவோம் எனவே இது தான் நல்ல இடம் என முடிவு பண்ணி ஒரு டீ தூள் கவரினுள் காசைப் போட்டு மண்ணில் புதைத்து வைத்தேன்.யாருமே பார்க்கவில்லை;காசு பத்திரமாக என்னிடமே இருக்கிறது என்ற சந்தோசத்தில் இரண்டு வாரம் கடந்தது.
ஒரு நாள் மணலில் விளையாடிக்கொண்டிருக்கும் போது என் தங்கைகளிடம் ரூபாய் நோட்டை எடுத்து காட்டினேன்.என் தங்கை என் அப்பாவிடம் காசு இருக்கும் இடத்தை காட்டிவிட்டாள்.அவ்வளவு தான்; என் கதை கந்தல், எனக்காக வைக்கப்பட்டிருந்த புளிய மர குச்சியை எடுத்து சரியாகப் பின்னியது மட்டுமல்லாமல், அரை மணி நேரம் முட்டி கால் போடவும் வைத்து விட்டார். அன்றைக்கு நான் அழுதது பதிவு எழுதும் போதும் ஞாபகம் வருகிறது.
இப்போது என் 3 வயதாகும் இரு குழந்தைகளுக்கும் தனித் தனியாக உண்டியல் வாங்கி கொடுத்திருக்கிறேன்.என் கணவர் ஆபீஸ் போகும்போது 5 ரூபாய் கொடுப்பார்,இருவரும் உண்டியலில் போட்டுவிடுவர்.அது மட்டுமல்லாமல் ஏதாவது சில்லரைக் காசு வீட்டில் தவறுதலாகக் கிடந்தாலும் அவர்கள் எடுத்து உண்டியலில் போட்டு விடுவர்.

புதன், 7 அக்டோபர், 2009

மதம் நமக்கு என்ன செய்தது?

இன்று நாட்டில் நடக்கும் அனைத்து வன்முறைகளுக்கும் காரணம் மதம் தான்! இது அனைவரும் அறிந்த ஒன்று,என்றாலும் நாம் மதம் தான் காரணம் என்று வெளிப்படையாகச் சொல்வது இல்லை.ஏன் நாம் சொல்ல தயங்குகிறோம்? ஏன் கடவுள் நம்மிடம் கோபித்துவிடுவாரோ என்ற பயம் தான்!

எதற்கு நாம் பயப்படவேண்டும்? எதெற்கு இந்த மதபிரிவினை? நீ முஸ்லீம்,நான் கிறிஸ்தவன்,அவன் இந்து என்று நாமாகவே ஏன் பிரித்து வைத்து கொள்கிறோம்? ஏதற்கு இந்த குண்டு வெடிப்புகள்? எதற்கு இந்த வன்முறைகள்? எதெற்கு இந்த அறிவியல் விஞ்ஞானத்தை அழிவிற்கு பயன்படுத்துகிறோம்?

மனிதனை மதம் பிடிக்க வைக்கிற மதவாதம் தான் இதற்க்கேல்லாம் ஒரே விடை.

மதம் நம்மை நல்வழிபடுத்த உருவாக்கப்பட்ட ஓன்று. அதனை நாம் தீவினைகளுக்கு பயன்படுத்துகிறோம்.

ஏன் நீ எந்த கடவுளையாவது வழிபடு, பக்கதது வீட்டுக்காரன் யாரை வழிபடுகிறான் என எதற்கு பார்க்கிறாய்? உங்கள் இருவரின் இரத்தமும் ஓன்று தானே! நிறத்தில் வேறுபாடு இருக்கிறதா சொல்? இருவரின் கண்ணீரும் துவர்ப்பு தானே! உன் உயிர் காக்க ஏன் ஒரு முஸ்லீம் இரத்தம் தந்து உதவுவதில்லையா? மனிதனேயம் இருந்தால் போதும் மனிதனுக்கு!மதனேயம் உன் வாசல்படியுடன் நிற்கட்டும்.
இன்று மதங்கள் நீ கிறிஸ்தவன்,நான் முஸ்லீம், அவன் இந்து என மட்டுமே கற்றுதந்திருக்கிறது.ஏனோ நாம் மனிதர்கள் என்பதை கற்று தர மறந்துவிட்டது.
இன்று மதங்கள் புனித நூலைத் தூக்க வேண்டிய கைகளை துப்பாக்கி தூக்க பழக்குகிறது.
இன்று மதங்கள் அன்பை போதிக்கவேண்டிய தருணத்தில மதவாதத்தை போதிக்கிறது.
இன்று மதஙகள் சகோதரத்துவத்தை எடுத்துரைக்க வேண்டியதை மறந்து பிரிவினையை ஞாபகப்படுத்துகிறது.
இந்த பதிவு யாரையும் புண்படுத்தும் நோக்கில் அல்ல.

ஒன்றே குலம்
ஒருவனே தேவன்
மதவாதம் வேண்டாமே!
மனிதநேயம் காப்போமே!

ஞாயிறு, 4 அக்டோபர், 2009

காத்திருக்கிறேன்

* காத்திருக்கிறேன்
மார்கழி மாத நள்ளிரவுக்காய்
ஊர் துயில் மூச்சு விடும்போது
ஒரு கோப்பை கோலமாவுடன்
வா...............
உன் வாசலில் கோலமிட...
* காத்திருக்கறேன்
என் வீட்டு ஜன்னலில்
உன்னழகை கோலமிட...
* உன் வாசல் கோலம்
முடிவடையும்- பனிப்பொழுது விடியும்போது !
* என்னவோ
என் ஜன்னல் கோலம்
முடிவடையாது...
இது தொடரும் - ஒரு காதல் கதை
நீ எனக்கு மனைவியாகும் வரை!

சனி, 3 அக்டோபர், 2009

அப்பாவ நாய் கடிச்சிடிச்சி

நேற்று இரவு என் கணவர் பால் வாங்குவதற்காக கடைக்கு போயிருந்தார்.எங்கள் வீட்டிற்கு வெளியே ஒரு நாய் குரைக்கும் சத்தம் கேட்டது.என் மூன்று வயது மகள் தொலைகாட்சி பார்த்துக்கொண்டிருந்தாள்.நாய் குரைக்கும் சத்தம் கேட்டதும் அம்மா அப்பாவ நாய் கடிச்சிடிச்சு என மழலைத்தமிழில் கத்தினாள்.உடனே நான் அப்பாவ நாய் கடிக்காது என் சிரித்துக்கொண்டே சொன்னேன்.
சிறிது நேரம் கழித்து என் கணவர் பால் வாங்கி வந்தார்.சட்டையெல்லாம் ஒரெ சேறு.என்ன ஆச்சு சட்டையெல்லாம் இப்படி மண்ணா இருக்கு எனக்கேட்டேன். ஒரு நாய் என் மேல ஏறி கடிக்கபாத்துது என்றார்.என் மகளுக்கு சிரிப்பு தாங்கமுடியவில்லை.
அப்ப நான் சொன்னேன் காஷ்யா நாய் குரைக்கிற சத்தத்தை கேட்ட உடனேயே,அப்பாவ நாய் கடிச்சிடிச்சு என சொன்னாள் என்றேன்.அவருக்கு ஒரே ஆச்சரியம்.

திங்கள், 28 செப்டம்பர், 2009

நீங்களே வீட்டில் வேக்ஸிங் செய்து கொள்ளலாம்.

இன்று பெண்கள் Vaxing செய்ய அழகு நிலையங்களுக்ககு செல்கின்றனர். இந்த முறையை நீங்கள் வீட்டிலேயே செய்துகொள்ளலாம். இதனால் பணம்,நேரம் மிச்சம் செய்துகொள்ளலாம்.
இப்போது Vaxing செய்வது எப்படி என பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
சர்க்கரை ----- 1 Cup
எலுமிச்சப்பழ சாறு-------- அரை கப்
செய்முறை:
அடிக்கனமான பாத்திரத்தில் சர்க்கரையையும்,எலுமிச்சப்பழசாறயும் கலந்து குறைவான தீயில் கொதிக்க விடவும்.கூடவே ஒரு தட்டையான கரண்டியால் கிளறி கொண்டே இருக்கவும். கலவை கெட்டி ஆகி Brown கலரில் வரும் போது இறக்கவும்.
இந்த கலவயை அலுமினியம் அல்லது ஸ்டீல் பாத்திரத்தில் ஊத்தி வைக்கவும். ஆறியதும் நன்றாக கெட்டியாகும். இக்கலவையை Fridge-ல் வைக்ககூடாது.வெளியே அறை வெப்பநிலையில் வைத்து ஒரு ஆண்டு வரை பயன்படுத்தலாம்.
Vaxing பண்ணுகிற நேரத்தில் சிறிதளவு கெட்டியான வேக்ஸ்யை எடுத்து ஒரு ஸ்டீல் பாத்திரத்தில் போட்டு,ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊத்தி அதனுள் வேக்ஸ் பாத்திரத்தை வைத்து Vax உருகும் வரை சூடு பண்ணவும்(Second boiling Method). இப்போது Vax Ready.
Vaxing strips கடைகளில் கிடைக்கிறது அல்லது பழைய காட்டன் துணிகளை கூட பயன்படுத்தலாம்.
எங்கு வேக்ஸ் பண்ணவேண்டுமோ அந்த இடத்தில் vax யை திக்கான,தட்டையான ஸ்டீல் ஸ்டிக் பயன்படுத்தி தேய்க்கவும்.அதன் மீது vaxing strip யை வைத்து லேசாக அழுத்தி தேய்க்கவும்.
பிறகு முடி வளர்ச்சிக்கு opposite -ல் strip யயை பலமாக இழுத்து எடுக்கவும்.இப்போது முடிகள் vax உடன் சேர்ந்து strip ல் வந்துவிடும்.
இதே முறையை பயன்படுத்தி கை,கால்,முகம் போன்றவற்றில் உள்ள ரோமங்களை அகற்றலாம்.
தோலில் எரிச்சல் ஏர்பட்டால் சிறிது வெள்ளரி சாறு தடவவும்.
எண்ணெய் பசை தோல் என்றால் வாக்ஸ் போடுவற்கு முன்னால் சிறிது பவுடர் தேய்க்கவும்.
வேக்ஸ் பதம் சரியில்லை என்றால்
1 vax தேய்க்கும் போது தோலில் ஒட்டாமல் சுருண்டு வரும்,அப்படி இருந்தால் வாக்ஸுடன் சிறிது தண்ணீர் சேர்த்து தண்ணீர் வாக்ஸுடன் கலரும் வரை அடுப்பில் வைத்து சூடு பண்ணவும்.
2 வேக்ஸ் தோலில் ஒட்டும், ஆனால் இழுக்கும் போது துணியில் ஒட்டாது. அப்படி இருந்தால் இன்னும் சிறிதளவு அடுப்பில் வைத்து சூடு பண்ணவும்.

வியாழன், 24 செப்டம்பர், 2009

இதற்காகத் தான் பிறந்தோமா?

மனதை பதறவைக்கும் இந்த VIDEO-வை மன தைரியமுடைவர்கள் மட்டும் OPEN பண்ணவும்.

மனித உயிர் மகத்தானது.

*உன்னை பெற்றவள் என்ன

பாவம் செய்தாள்

இந்த கோலத்தில் பார்ப்பதற்கு?

*உன் உயிர் மூச்சு

ஒரு நொடியில் அடங்கி போயிற்று

ஆயிரம் கண் முன்னாலே

*உன் ஒரு கோடி கோபங்கள்

ஒரு நொடியில்

அடங்கினவா?

*ஆசைகள் பல கோடி

உன்னுள்ளே இன்னும்

அடங்காமல் துடிக்கிறதெ

அது உனக்கு தெரிகிறதா?

செவ்வாய், 15 செப்டம்பர், 2009

மணமகள் தேவை

குறைவாக படித்து, அதிகம் சம்பாதிக்கும், தலைக்கனம் பிடித்த என் ஓரே மகனுக்கு மணமகள் தேவை.
1 பெண் கண்டிப்பாக உயர் படிப்பு படித்தவளாக இருக்கவேண்டும்.
2 வீட்டிற்கு ஓரே பெண்ணாக இருக்கவேண்டும்.
3 திருமணத்திற்கு பிறகு வேலைக்கு போகக்கூடாது.
4. திருமணத்திற்கு பிறகு பெற்றோரை மறந்து விட வேண்டும்.
5. எல்லாவற்றுக்கும் தலை ஆட்டுபவளாக இருக்கவேண்டும்.
6. அம்மா,அப்பாவுக்கு பிடித்த சமையல் சமைக்கத் தெரிந்தவளாக இருக்கவேண்டும்.(பாவம் அவங்க Sugar,BP எல்லாம் இருக்கு!)
7. நான் இரவு 12 மணி , 1 மணிக்கு தான் வருவேன். அதுவரைக்கும் தூங்காம
முழிச்சிருகணும்.
8. நான் தண்ணி அடிச்சிட்டு வந்தாலும் ஏன் என கேட்கக்கூடாது.
9. வந்த உடனே டயர்டா தூங்கிவிடுவேன்.
10. உனக்கு என்ன தேவையோ எல்லாம் வாங்கி தருவேன்.
11.பக்கத்து வீட்ல பேசக்கூடாது.
12.மொபைல் வாங்கி தருவேன்,ஆனா நீ பேசக்கூடாது,Monthly Bill வந்திரும்.
13.வெ`ளியே போனா எப்பவாவது 7 seconds பேசுவேன். நான் ரொம்பவே busy.
14. வீட்ல TV பாரு. ஆனா EB Bill ஏறாம பாத்துக்கணும்
15. Intenet Connection உண்டு, ஆனா அரை மணி நேரத்துக்கு மேல் browse பண்ணக்கூடாது. charge ஏறாம பத்துக்கணும்.
16. குறிப்பா E-mail அனுப்பக்கூடாது.
17.படிச்சத எல்லாம் மறந்துக்கணும்.
18.வீட்டு வேல எல்லாம் செய்யணும்.
19. எனக்கு கை கால் பிடிச்சு விடணும்.
20. நான் friends கிட்ட மணிக்கணக்கா பேசுவேன். எதுவும் சொல்லலக்கூடாது.
21. நான் ரொம்பவே முன் கோபி,கோபம் வந்தா கன்னத்துல அடிப்பேன்.
22.அப்பப்ப வீட்டை விட்டு வெளியே போ என்பேன்,ஆனா போகக்கூடாது.
23. நான் திட்டும் போதெல்லாம் அழணும்,ஆன கண்ணீர் வரக்கூடாது.
24.அடிக்கடி வெளியே Friends கூட Tour போவேன், எங்கேயும் கூட்டி போகமாட்டேன்.(உடம்பு Tired ஆகி விடும்)
25. எங்க அம்மா எது சாப்பிடக் கொடுக்கிறாங்களோ அது தான் சாப்பிடணும்(விஷத்தையா குடுக்கப் போறாங்க்க!)
இந்த வரன் பிடித்திருந்தால் அடுத்த பதிவில் தெரிவிக்கவும்,பின்னூட்டத்தில் தெரிவித்தாலும் ஏற்றுக்கொள்ளப்படும்.
குறிப்பு: இன்று முக்கால் பங்கு உயர் படிப்பு படித்த பெண்களும் இப்படித்தான்
வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இன்னும் நிறைய...............

திங்கள், 14 செப்டம்பர், 2009

இது தான் நட்பின் ரகசியமோ?

என் கணவரின் நண்பர் நெடு நாட்களுக்கு பிறகு போன் பண்ணியிருந்தார்.நலம் விசாரித்ததோடு, வேலை எல்லாம் எப்படி போயிகொண்டிருக்கிறது என என் கணவர் கேட்டார்.
நான் இப்போது வேலையை விட்டு விட்டேன்,சினிமா புரொடியூஸ் பண்ணலாம் என இருக்கிறேன். அதற்கு 2 கோடி எஸ்டிமேட் போட்டிருக்கேன்.உங்களுக்கு என்ன தோன்றுகிறது என என் கணவரிடம் கேட்டார். என் கணவரும் நல்ல யோசனை தான்,எனக்கு இது பற்றி அனுபவம் இல்லை. உனக்கு எதாவது உதவி வேண்டும் என்றால் என்னிடம் கேள் என சொன்னார்.
எப்படி அவ்வளவு பணம் புரட்டுவான்,அதுவும் சினிமா வெற்றியடையவில்லையென்றால் என்ன பண்ணுவான் என என் கணவரிடம் கேட்டேன். நீங்க அவனை படம் புரொடியூஸ் பண்ணுவதை பிறகு பாத்துக்கலாம், ஒழுங்கா வேலைக்கு போ என திட்டி புத்தி சொல்லியிருக்கலாமே என் கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில் என்னை சற்று சிந்திக்க வைத்தது.
அவனுக்கு என்ன தோணுதோ அதை அவன் செய்யட்டும், நாம் தடுக்க வேண்டாம். நம்மால் முடிந்த உதவியை செய்வோம் என என் கணவர் சொன்னார்.
உடனே நான் "அப்ப படம் சரியா ஓடலேன்னா .......... "என்றேன். உடனே என் கணவர் "படம் சரியா ஓடிச்சுதுன்னா................."என்றார் சிரித்த படியே.
அவர் கூறியவைகள் என்னை 3 விதமா யோசிக்க வைத்தது.
1. எதையும் Positive-ஆக யோசிக்க வேண்டும்.
2. நண்பனுக்கு உதவ வேண்டும்.
3. நண்பனின் கருத்தை மதிக்க வேண்டும்.
உடனே நான் என் கணவரிடம் சொன்னேன், உங்களுக்கு நிறைய நல்ல நண்பர்கள் இருப்பதற்கு இது தான் காரணமோ என்றேன் சிரித்துக்கொண்டே.

ஞாயிறு, 13 செப்டம்பர், 2009

உங்கள் பதிவு முன்னணி பதிவில் இடம் பெற வேண்டுமா?

1. உங்கள் பதிவு சமுதாய விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவாக இருக்கிறதா?
2. நீங்கள் படிக்கும் பதிவிற்கு கமென்ட்ஸ் எழுதுகீறீர்களா?
3. நீங்கள் படிக்கும் பதிவிற்கு வோட்ஸ் போடுகிறீர்களா?
4. உங்கள் பதிவு வாசகர்கள் ஒருவரையாவது திருத்தியிருக்கிறதா?
5. உங்கள் பதிவு யார் மனதையும் புண்படுத்தாமல் இருக்கிறதா?
6.உங்கள் கருத்துக்கள் ஏற்புடையதாக இருக்கிறதா?
7.உங்களுக்கென தனி எழுத்துப்பாணி இருக்கிறதா?
8. உங்கள் பதிவுகள் காலத்திற்கு ஏற்றார் போல் மாறுபடுகிறதா?
9.நெகட்டிவ் கமென்ஸ் தரும் பதிவர்களை மீது கோபம் இல்லை தானெ?
10.உங்கள் பதிவுகள் உங்களை உணர்வுப்பூர்வமாக பாதித்திருக்கிறதா?
-----------இவை அனைத்திற்கும் உங்கள் பதில் ஆம் என்றால் ,உங்கள் பதிவு முன்னணிப் பதிவு தான், போங்க!
உங்களை பாத்தா எனக்கு பொறாமையா இருக்கு!

வியாழன், 30 ஜூலை, 2009

என் தோழியிடம் பிடிக்காத பத்து

1 மாசத்துல ஒரு நாள் மறக்காம Missed Call கொடுப்பா.
2 என்னாச்சு என பதறியடித்து போன் பண்ணினா No answer என பதில் வரும்
3 எப்படி இருக்கே என கேட்டால் நல்ல இருக்கிறியா எனக் கேட்டு வெறுப்பேத்துவாள்.
4 என்றைக்காவது அவள் போன் எடுத்தால் இன்னொரு கால் வருது என போனைக் கட் பண்ணுவாள்.
5 நேரில் பார்த்தால் ஒரு புன்முறுவலுடன் நிறுத்திக்கொள்வாள்
6 e-Mail போட்டால் படித்துவிட்டு reply அனுப்பமாட்டாள்
7 எப்ப பார்த்தாலும் சாதிக்கணும் என்பாள், ஆனா இன்னும் எதையும் சாதிச்ச்தில்லை
8 எனக்கு பிடித்த உணவைப்பற்றி பேசினா ,கோலஸ்ரால் ,heart attack அது இது என டாக்டர் போலப் பேசுவா
9. ரூம்ல எப்பப் பார்த்தாலும் தூங்கிக்கிட்டே இருப்பா
10 அவளோட பொருளை யாரையும் தொடவிடமாட்டா
(இது கற்பனை அல்ல நிஜம் )


சனி, 25 ஜூலை, 2009

இதுதாங்க காதல்

என் உறவினர் ஒருவர் பத்தாம் வகுப்பு படிக்கும்போது வகுப்பில் படிக்கும் பெண்ணை விரும்பியுருக்கிறார். இருவர் மனமும் பல பட்டாம்பூச்சிகளை பறக்கவிட, காதல் வானில் பறந்தனர்.
இது பெண்ணின் வீட்டுக்கு தெரியவர, வீட்டில் சூறாவளிக் காற்றடிக்க,அவள் பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டாள்.இவரோ கொஞ்சவும் மனம் தளராமல் எப்படியாவது அவளுக்குக் கணவனாக வேண்டும் என்ற வெறியிலே நன்றாகப் படித்து அரசாங்க உத்தியோகத்திலும் அமர்ந்த்துவிட்டார். இப்போது கொஞ்சம் நிம்மதி, இனி அவள் அப்பாவிடம் போயி பெண் கேட்கவேண்டும். எப்படியானாலும் இனி அவள் நமக்கு தான் என்ற முடிவில் பெண் கேட்டிருக்கிறார்.
இரு வீட்டார் ஆசிர்வாதத்துடன் திருமணம் நடந்தது. அவள் நான்கு குழந்த்தைகளுக்கு தாயாகி,இப்போது பாட்டியாகக் காத்துக்கொண்டிருக்கிறார்.
நானே நேராகவேப் பார்க்கிறேன்,வருடம் முப்பது ஓடியும், இன்றும் புதுமணத் தம்பதியராகவே மகிழ்ச்சியாகவே இருக்கின்றனர்.
காதல் தோல்வி எனத் தாடி வளர்த்துக்கொண்டிருகிறவர்கள் ,இது போல் வாழும் காதலை பார்த்து ,காதலியை கைபிடிக்கலாமே.
உண்மை காதல் வாழ்க! இந்த தம்பதியர் பல்லாண்டு காலம் மனமொத்து வாழ வாழ்த்துக்கள்.


புதிய இடுகைகள் முகப்பு