சனி, 3 அக்டோபர், 2009

அப்பாவ நாய் கடிச்சிடிச்சி

நேற்று இரவு என் கணவர் பால் வாங்குவதற்காக கடைக்கு போயிருந்தார்.எங்கள் வீட்டிற்கு வெளியே ஒரு நாய் குரைக்கும் சத்தம் கேட்டது.என் மூன்று வயது மகள் தொலைகாட்சி பார்த்துக்கொண்டிருந்தாள்.நாய் குரைக்கும் சத்தம் கேட்டதும் அம்மா அப்பாவ நாய் கடிச்சிடிச்சு என மழலைத்தமிழில் கத்தினாள்.உடனே நான் அப்பாவ நாய் கடிக்காது என் சிரித்துக்கொண்டே சொன்னேன்.
சிறிது நேரம் கழித்து என் கணவர் பால் வாங்கி வந்தார்.சட்டையெல்லாம் ஒரெ சேறு.என்ன ஆச்சு சட்டையெல்லாம் இப்படி மண்ணா இருக்கு எனக்கேட்டேன். ஒரு நாய் என் மேல ஏறி கடிக்கபாத்துது என்றார்.என் மகளுக்கு சிரிப்பு தாங்கமுடியவில்லை.
அப்ப நான் சொன்னேன் காஷ்யா நாய் குரைக்கிற சத்தத்தை கேட்ட உடனேயே,அப்பாவ நாய் கடிச்சிடிச்சு என சொன்னாள் என்றேன்.அவருக்கு ஒரே ஆச்சரியம்.

4 comments:

:))))

அவருக்கு மாத்திரமல்ல எனக்கும் ஒரே ஆச்சரியம்!
குட்டிக் குழந்தை பற்றி குட்டியா சொல்வது நன்றாக இருக்கிறது

ஒருவேளை குட்டி சாமியாரா வருவாங்களோ.. எதிர்காலத்துல?

குழந்தைகள் நம்மை விட புத்திசாலிகள் என்பது நிரூபணமாகியிருக்கிறது

கருத்துரையிடுக

பிடித்தால் ஓட்டு போட்டு பிரபலமாக்குங்கள்! படித்தால் பின்னூட்டமிட்டு ஊக்கமளியுங்கள்!!

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு